தொற்று நோய்களின் பிறப்பிடமாக மணப்பாறை அரசு மருத்துவமனை மாறி வரும் அவலம்

தொற்று நோய்களின் பிறப்பிடமாக  மணப்பாறை  அரசு மருத்துவமனை மாறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையோடு, மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள்  உடனுக்குடன் அப்புறப்படுத்தப் படுவதில்லை என  அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குப்பையினால்  ஏற்கனவே சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தொற்று நோய்க்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக  தலையிட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts