தோனியை நீக்கிவிட்டு இளம்வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் : கௌதம் காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தோனியை நீக்கிவிட்டு இளம்வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரரும், மக்களவை உறுப்பினருமான கௌதம் காம்பீர் கூறியிருக்கும் கருத்து, தோனி ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

ஓய்வு முடிவை அறிவிப்பது என்பது அந்தந்த வீரரின் சொந்த முடிவு என்பதால், அதில் யாரும் தலையிட முடியாது என்று கூறியுள்ளார். தன்னை பொருத்தவரை அடுத்த உலகக் கோப்பை தொடரில் தோனி விளையாட வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ள காம்பீர், தோனி வருங்கால அணியில் இல்லை என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த முடிவை தோனி என்ற வீரருக்காக பார்க்காமல், அணியின் நலனிற்காக எடுக்கவேண்டும் என்று கூறியுள்ள காம்பீர், தன்னைப் பொறுத்தவரை இந்திய அணி நிர்வாகம், தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி அடுத்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், இளம் வீரர்களுக்கு இப்போதில் இருந்தே வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று கூறியுள்ள காம்பீர், அது ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் அல்லது வேறொரு வீரராக இருந்தாலும் சரி எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts