தோனி ஓய்வை அறிவிக்க வேண்டும் : அனில் கும்ப்ளே

மகேந்திர சிங் தோனி விரைவில் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்தியா வெறும் கையுடன் நாடு திரும்பியதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த தாக்கம் அடங்குவதற்குள், தோனியை அணியில் நீக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதையறிந்த தோனி, ஓய்வை எடுத்துக் கொண்டு ராணுவ பயிற்சிக்கு சென்றுவிட்டு, வெற்றிகரமாக ஊர் திரும்பி விட்டார். அடுத்து தென் ஆப்ரிக்கா தொடர் இந்தியாவுக்கு காத்திருக்கிறது. அந்த தொடரிலும் தோனி இல்லை. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும், இந்த விவகாரம் தோனிக்கு பெரும் நெருக்கடியை அளித்திருக்கிறது. இதற்கு மேலும் தாமதிக்காமல் ஓய்வை அறிவித்து விடுங்கள் என்று தோனிக்கு பலரும் அறிவுறுத்தினர். தற்போது முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவும் தோனியை ஓய்வு பெற வலியுறுத்தியுள்ளார். அணியின் தேர்வில் இப்போது தோனி என்பவரை ஒரு போட்டியாளராக நிர்வாகம் கருதவில்லை என்ற நிலையில், இது, அவர் விடைபெற வேண்டிய தருணம் என்று கூறியுள்ளார். ஆகவே, அணி தேர்வாளர்கள் இது குறித்து அவரிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ள கும்ப்ளே, டி 20 உலக கோப்பைக்கு தோனி ரொம்ப அவசியமானவர் என்றால் அனைத்து போட்டிகளிலும் அவரை ஆட வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts