தோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்

தோல்வி பயத்தால் தான் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களை தமிழ அரசு நடத்தவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த 40 ஆண்டுகளாக அதிமுக. மற்றும் திமு.க கட்சிகள் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை எனவும், ஒருவருக்கொருவர் மாறி மாறி குறை பேசி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை எனவும், தோல்வி பயம் தான் தேர்தல்கள் தள்ளி போக காரணம் எனவும் கூறினார். சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts