நக்கீரன் கோபால் மீது 124 – A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

தமிழக ஆளுநர் மாளிகை குறித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் ஆசிரியர் கோபால், இன்று கைது செய்யப்பட்டார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தமிழக ஆளுநர் மாளிகை குறித்து அவதூறு பரப்பியதாக நக்கீரன் இதழ் மற்றும் இணையதளம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், புனே செல்வதற்கான நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமானம் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரை விமான நிலைய காவல் உதவி ஆணையர் விஜயகுமார் விசாரணைக்கு அழைத்து சென்றார். சுமார் ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிந்தாதிரிப்பேட்டை டி.சி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர் மீது 124 – A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Related Posts