நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் இயற்கை பேரிடர் காரணமாக 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல்

நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காரணமாக 993 பேர் உயிரிழந்துள்ளதாவும், 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டில் மழை வெள்ளம், இயற்கை பேரிடர் காரணமாககேரளாவில் 387 பேர், உத்தரபிதேசத்தில் 204 பேர், மேற்கு வங்காளத்தில் 195 பேர் கர்நாடகாவில் 161 பேர், அசாமில் 46 பேர் என மொத்தம் 993 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 17 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில், நிவாரண நிதியை செலவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைகளில் பேரிடர் தொடர்பாக தனியாக நிதியை ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2017ம் ஆண்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நாடு முழுவதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 200 என்றும், இதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 514 பேர் உயிரிழந்த்தாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Posts