நடிகர் எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதைபோல் தமிழக பாஜக தலைவர் பொறுப்பு குறித்து பேசுகிறார்

நடிகர் எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதைபோல் தமிழக பாஜக தலைவர் பொறுப்பு குறித்து பேசியிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

         ஸ்ரீவில்லிப்புத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்வி.சேகர், வாய்ப்பு கிடைத்தால் தமிழக பா.ஜகவுக்கு தலைமை ஏற்க தயார் எனவும், தலைமைக்கு வந்தால் தற்போது இருப்பதை விட கட்சியை பலமாக்குவேன் எனவும் கூறினார். மேலும், பாஜக தலைமை தன்னை பயன்படுத்தி கொள்வது நல்லது எனவும், இதற்காக தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? எனவும் கூறியிருந்தார். அவரது பேச்சு பாஜக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

          இந்நிலையில், எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு பதிலளித்துள்ள தமிழிசை, எஸ்.வி.சேகர் பல நகைச்சுவை நாடகங்களில் நடித்துள்ளார் எனவும், அதைப்போல் இதுவும், நாடகம் என்று நினைத்து பேசிவிட்டார் எனவும் கூறினார்.  பாஜக தலைவர் பொறுப்பு என்பது மிக லேசான விஷயமாக எஸ்.வி.சேகர் நினைத்துவிட்டார் என தமிழிசை சவுந்தர ராஜன் விமர்சித்துள்ளார்.

Related Posts