நடிகர் சூர்யாவின் கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை வரவேற்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்  தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்வி  கொள்கை  தொடர்பாக சூர்யா தெரிவித்தகருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார் என்றும் அதனை  தாமும் வரவேற்பதாகவும்  தெரிவித்தார். மேலும் அனைவருக்கும்  குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக கல்வி கிடைக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை அமையவேண்டும் என அவர் கூறினார்.

Related Posts