நடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் அவரை மாலை போட்டு வரவேற்பேன்

நடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் அவரை மாலை போட்டு வரவேற்பேன் என மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருவதன் பலனாகதான் அவருக்கு ஐ.நா விருது வழங்கியுள்ளதாக தெரிவித்தார். பாஜகவுக்கு எதிராக விடுதலை போராட்டம் நடத்தும் ராகுல்காந்திக்கு விடுதலை கிடைக்காது எனவும், கற்பனையில்தான் அவர் போராட்டம் நடத்துவார் எனவும் கூறினார். தமிழகம் புறம்போக்கு நிலம் போல் நாதியில்லாமல் கிடப்பது போன்று சிந்தனையுடன் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது  என குறிப்பிட்டார். அரசியலில் இருப்பவர்களை எல்லாம் ஊழல்வாதிகள் என பொதுவாக பேச கூடாது எனவும், அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை குறிப்பிட்டு காட்டினால், நடிகர் விஜய்க்கு மாலை போட்டு வரவேற்பேன் எனவும் தெரிவித்தார். மேலும்,  அனைவராலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவாக ஆக முடியாது என்றும், மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த் எனவும் குறிப்பிட்டார்.

Related Posts