நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இல்லை: விசாரணை கோரிய மனு தள்ளுபடி

 

 

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி, அதன்பின்னர் உடலை ஒப்படைத்தனர். ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், துபாய் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படுவதற்கு ஏதும் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி உத்தரவிட்டனர்.

Related Posts