நடிகை ஸ்ரீரெட்டி படங்களில் நடிக்க தடை விதித்து தெலுங்கு நடிகர் சங்கம் அறிக்கை

 

 

கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு படங்களில் நடிக்க தடை விதித்து தெலுங்கு நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஏப்ரல்-10

தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டினார். இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது. தெலுங்கு திரைப்பட துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாயம் வேண்டும் என கோரியும் அவர் சமீபத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டார். 

இந்நிலையில், தெலுங்கு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகை ஸ்ரீரெட்டி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு நடிகர் சங்கம் வழங்கிய அங்கீகார அட்டையை ரத்து செய்துள்ளோம். அவருடன் எங்கள் சங்கத்தை சேர்ந்த எந்த கலைஞரும் இனிமேல் நடிக்க மாட்டார்கள். தடையை மீறி யாரேனும் நடித்தால் அவர்களும் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கு நடிகர் சங்கம் நடவடிக்கையால் ஸ்ரீரெட்டி சினிமாவில் நடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. 

Related Posts