நடுத்தர மற்றும் சராசரி மக்கள் மீது காங்கிரஸ் அரசு வரிச்சுமையை ஏற்றாது:ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் தமிழாக்கம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை மதுரையில் இன்று வெளியிப்பட்டது. இதனை ப.சிதம்பரம் வெளியிட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய சிதம்பரம், சாத்தியம் இல்லாத எந்த வாக்குறுதியையும் காங்கிரஸ் கூறவில்லை எனவும், சமூக பொருளாதார திட்டங்களுக்கான மானியத்தை காங்கிரஸ் அரசு தடுக்காது எனவும் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி முழுமையாக மாற்றப்பட்டு உண்மையான ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

பைட்

2016ம் ஆண்டுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி யார் என கூட தெரியாது என்று குறிப்பிட்ட ப.சிதம்பரம், நிதி அமைச்சராக இருந்தபோது தமிழகத்து எவ்வளவு நிதி வழங்கப்பட்டு உள்ளது என கோப்பை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீயாக பரவி வருவதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டார்

Related Posts