நதிகளை இணைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 

 

அனைத்து நதிகளையும் இணைத்து, ஒரே வாரியத்தின் கீழ் நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நதிகள் இணைப்புகோரிய மனு  தள்ளுபடி செய்யப்பட்டது. 

டெல்லி, ஏப்ரல்-09

நாடுமுழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், அனைத்து நதிகளையும், மத்திய அரசின் வாரியத்தின் மூலம் நிர்வகிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ‘‘நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் நிர்வகிக்க வாரியம் அமைப்பது என்பது சாத்தியமற்றது. நாட்டின் சில பகுதிகளில் நதிநீர் பிரச்னை உள்ளதால், அனைத்து நதிகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர செல்வது ஏற்புடையதல்ல. இது நீதிமன்றத்தின் பணியும் அல்ல. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது என்பது எளிதான காரியம் அல்லது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டனர். 

 

Related Posts