நன்மை பயக்கும் திட்டங்களை மட்டுமே அரசு செயல்படுத்தும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை மட்டுமே அரசு செயல்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிதித்துள்ளார்

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தலைமைச் செயலர் முப்படை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நாடு செழிக்க நன்னீர் அவசியம் என்ற அவர், அனைவரும் மழைநீரை சேமிக்க வலியுறுத்தினார். நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்த அவர், மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அரசு அதனை எதிர்த்து மக்கள் நலனை பாதுகாக்கும் என்றார்.

Related Posts