நமோ டிவியை தொடங்க அனுமதி அளித்தது எப்படி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கேள்வி


பாஜகவுக்கு ஆதரவாக அண்மையில் தொடங்கப்பட்ட “நமோ” தொலைக்காட்சி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், அண்மையில் தொடங்கப்பட்ட நமோ தொலைக்காட்சியின் இலச்சினையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் உள்ளது என்றும். அவரது தேர்தல் பிரசாரங்களை அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இந்தத் தொலைக்காட்சியைத் தொடங்க சம்பந்தப்பட்ட கட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதா? அப்படி அனுமதி பெறாமல் அந்தக் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது என்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் வினவியுள்ளது. மேலும்  கடந்த மார்ச் 31ம் தேதி நானும் கூட காவலன்தான் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நேரலை செய்தது குறித்து தூர்தர்ஷனுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Related Posts