நம்பிக்கையை இழக்காமல் அன்பாக இருந்த அனைவருக்கும் நன்றி: சல்மான்கான் ட்விட்

 

 

நம்பிக்கையை இழக்காமல் என்னுடன் அன்பாகவும் பக்கபலமாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என ஜாமீனில் இருந்து வெளியே வந்த நடிகர் சல்மான்கான் பதிவிட்டுள்ளார்.

மும்பை, ஏப்ரல் – 10 

அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு, ஜோத்பூர் நீதிமன்றம், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால், இரு நாட்களில், சல்மான் கானுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 

ஜாமீனில் வெளிவந்த பிறகு சல்மான்கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நம்பிக்கையை இழக்காமல் என்னுடன் அன்பாகவும் பக்கபலமாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.

 

Related Posts