நம்பிக்கை இழக்க வேண்டாம் : பிரதமர் மோடி அறிவுரை

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நம்பிக்கை இழக்க வேண்டாம்’ என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று அதிகாலையில் நடைபெற்றது. சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருந்தார்கள்.

“லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை என்றும் தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர்,  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார். விஞ்ஞானிகளை நினைத்து நாடே பெருமை கொள்வதாகவும், விஞ்ஞானிகள் எப்போதும் சிறந்ததையே வழங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தைரியமாக இருக்க வேண்டிய தருணங்கள் இது என்றும் விண்வெளி திட்டத்தில் தொடர்ந்து கடினமாக உழைப்போம்” என்றும் விஞ்ஞானிகளுக்கு அவர் நம்பிக்கையூட்டினார்.

நாடு, அறிவியல், மக்களுக்கு பெரும் சேவையாற்றியுள்ளீர்கள் எனவும் விஞ்ஞானிகளின் உழைப்பைக் கண்டு நாடு பெருமை அடைகிறது எனவும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

Related Posts