நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமர் ஆக முடியாது: மம்தா பானர்ஜி 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகப்போவது கிடையாது என்று உறுதிபட தெரிவித்தார்.

அவர் திரும்பி வரமுடியாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் வருவதற்கான கணக்கை நீங்களே கூறுங்கள் என்றார். மத்தியில் மாநில கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசு அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு குர்தா மற்றும் இனிப்பு அனுப்பியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்களுக்கு குர்தாவை அனுப்பியுள்ளது கொல்கத்தாவின் கலாச்சாரம் என்று கூறினார்.

Related Posts