நலிந்த தொழிலாளர்கள் 107 பேருக்கு நிதியுதவி

 அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 107 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர்.

                அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, தேர்வு செய்யப்பட்ட அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 107 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வழங்கினர்.

Related Posts