நல்லக்கண்ணுவுக்கு விரைவில் மாற்று வீடு வழங்கப்படும்:  ஓ பன்னீர் செல்வம் 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணு சென்னை தியாகராய நகரில் உள்ள சி.ஐ.டி. நகரில் வசித்து வந்தார்.  அரசால் ஒதுக்கப்பட்ட அந்த வீட்டிற்கு  அவர் மாதாமாதம் வாடகை செலுத்தி  வந்தார். இந்நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட இருப்பதாகவும் அதனால் அங்குள்ளவர்கள் உடனடியாகக் காலி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதனை அடுத்து நல்லக்கண்ணு அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்னை கே கே நகருக்கு குடி பெயர்ந்தார். நல்லக்கண்ணுவுக்கு மாற்று வீடு கொடுக்காமல் அவரை இப்படிக் காலி செய்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு மீதுகடும் விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில்,   நல்லக்கண்ணுவுக்கு விரைவில் மாற்று வீடு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த குடியிருப்பில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன்களுக்கும் புதிதாக வீடு அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

 

Related Posts