டெல்லியில் இருந்து 11 நாட்களில் 1750 கிலோ மீட்டர் தொலைவு கடந்து வந்த புறா

சென்னையில் நடைபெற்ற புறா பந்தயத்தில் டெல்லியில் இருந்து 11 நாட்களில் 1750 கிலோ மீட்டர் தொலைவு கடந்து வந்த புறா முதல் பரிசை தட்டி சென்றது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குட் வில் பிஜியன் கிளப் சார்பில் ஆண்டுதோறும் புறா பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட புறாக்கள் கலந்து கொண்டன.இந்த போட்டியில் தொலை தூர போட்டியில்   சென்னையில்  இருந்து டெல்லி வரை சுமார் 1750 கிலோ மீட்டர் தொலைவு புறாக்கள் விடப்பட்டன.இதில் ரத்னகுமார் என்பவரின் புறா பந்தய தூரத்தை 11 நாட்களில் கடந்து முதல் பரிசை தட்டி சென்றது.அதேபோல் 800 கிலோ மீட்டர் பந்தயத்தில் ஆறுமுகம் புறாவும்,300 கிலோ மீட்டர் பந்தயத்தில் ராஜாமதி என்பவர் புறாவும் வெற்றி பெற்றது.வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளி சுழல் கோப்பை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதுபோன்ற போட்டியால் புறா இனங்கள் காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப்படுவதாக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

Related Posts