நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

 

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-27 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்நிலையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நளினி வழக்கு தொடர்ந்தார். 20 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு செய்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை அடிப்படையில், தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சசிதரன் அமர்வு முன்கூட்டியே நளினியை விடுதலை செய்யும்படி உத்தரவிட முடியாது எனக் உத்தரவிட்டு மனுவை நிராகரித்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், உயர்நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்றும்  நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Posts