நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தவர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டது. அப்போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு செய்யவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. அதை ஏற்று உள்ளாட்சி தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையமும் உத்தரவாதம் அளித்துள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே அக்டோபர் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts