நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு தீவிரம்

மதுரையில் உள்ள விளாச்சேரி கிராமத்தில் கொலு பொம்மைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விளாச்சேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 50 வருடங்களுக்கும் மேலாக கொலு பொம்மைகள் தயாரித்து வருகின்றன. இந்த ஆண்டு புது வரவாக அத்திவரதர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. 150 ரூபாயில் இருந்து சுமார் 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயாராகும் கொலு பொம்மைகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த மாதம் 29-ந் தேதி நவராத்திரி கொலு தொடங்க உள்ள நிலையில், சிறு, குறு வியாபாரிகள் விளாச்சேரியில் இருந்து கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.

Related Posts