நவராத்திரி ஸ்பெஷல் : ஸ்ரீகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் கொலு தர்பார்

காரைக்காலில் நவராத்திரியை முன்னிட்டு  ஸ்ரீகாரைக்கால் அம்மையார் ஆலயத்தில் கொலு தர்பார் துவங்கியது.

சர்வ அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் வீற்றிருந்த அம்மன், ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி கொலு தர்பார் கண்காட்சியை திருவாவடுதுறை ஸ்ரீலஸ்ரீ சீர்மன்னு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் துவக்கி வைத்தனர். விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்கள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இதேபோல்  ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த அனிதா, ரமேஷ் தம்பதியினர் அவர்களது வீட்டில் 63படிகளில், 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில், இரண்டாயிரத்து, 500 பொம்மைகள் வைத்து பிரமாண்ட கொலு அமைத்துள்ளனர். இதில், பீமன் அரக்கு மாளிகை, கணையாழி, கருடசேவை. சரஸ்வதி பூஜை, அபிமன்யூ திருமணம், குறவன் குறத்தி, மற்றும் மத ஒன்றுமையை வலியுறுத்தும் வகையில்  பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

Related Posts