நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் : மே-15

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல்வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து கடந்த 12 ஆம் தேதி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். நவாஸின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமைப்புகள், அவருக்கு எதிராக போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, லாகூர் நீதிமன்றத்தில் நவாஸ் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவாஸ் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

Related Posts