நவி மும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீவிபத்து : 7 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 ஊழியர்கள் பலியாகினர்.

நவி மும்பை அருகே யுரானில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் மற்ரும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று கலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, திடீரென ஒரு பகுதியில் தீப்பிடித்தது. பின்னர் அது மற்ற இடங்களுக்கும் பரவியது. இதனால் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் 7 பேர் இறந்ததாகவும், 3 பேர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்று ஓஎன்ஜிசி கூறி உள்ளது. எரிவாயுவை ஹசிரா ஆலைக்கு திருப்பிவிட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Related Posts