நாகை அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பலி

நாகை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றியம் மங்கைநல்லூர் கிராமத்தில், அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, சரக்கு வேனில் 20-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் அழைத்துவரப்பட்டனர்.

கூட்டம் முடிந்ததும் அதே வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, அனந்தநல்லூர் என்ற இடத்தில், வாகனத்தின் டயர் வெடித்து, சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கந்தமங்கலத்தைச் சேர்ந்த விநாயகராஜா,அருள்தாஸ் மற்றும் தனபால் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் மதி, பிச்சை, ஓட்டுனர் மாரிமுத்து ஆகியோர் படுகாயங்களுடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாலையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.

Related Posts