நாங்குநேரியை சிறந்த தொகுதியாக மாற்ற முயற்சிக்கப்படும் : ஆர்.மனோகரன்

நாங்குநேரியை சிறந்த தொகுதியாக மாற்ற முயற்சிக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர்.மனோகரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாங்குனேரி  தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தனது பரப்புரையை அடுத்த தலைமுறை பற்றி தான் இருக்கும் என்று அவர் கூறினார். நாங்குநேரி தொகுதியில் உள்ள இளைஞர்களின் மேம்பாட்டில் தனிகவனம் செலுத்தப்படும் என்றும் ரூபி மனோகரன் தெரிவித்தார்.

Related Posts