நாடார் சமுதாயத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்த கருணாஸ் மன்னிப்பு கேட்கும்

நாடார் சமுதாயத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்த கருணாஸ் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்  தொடரும் என நாடார் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுகிழமை அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய கருணாஸ் தமிழக முதல்வர், காவல் அதிகாரி மற்றும் சில சமுதாயத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது

இதனைக் கண்டித்து,  சென்னை வடபழனி சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டை முற்றுகையிட நாடார் அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கருணாசை கைது செய்ய வலியுறுத்தி அவரது புகைப்படத்தை எரித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், கருணாஸ் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Posts