நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் மேலும் பத்து நாட்களுக்கு நீட்டிப்பு

நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் பத்து நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் நிலுவையில் இருக்கும் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மேலும் பத்து நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் புதிய உறுப்பினர்கள்பதவியேற்பு, முழுமையான பட்ஜெட் தாக்கல் போன்ற முக்கிய நிகழ்வுகளைக் கண்டது. 26-ம் தேதியுடன் இந்த கூட்டத் தொடர் நிறைவு பெற உள்ள நிலையில் இதனை மேலும் பத்து நாட்கள் வரை நீட்டித்துஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts