நாடாளுமன்றத்தில் தலைவர்கள் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை.

நாடாளுமன்றத்தில், அண்ணா சிலையின் பாதம் தொட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வணங்கினார்.             

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று சென்றார். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலையை பாதம் தொட்டு வணங்கினார். தொடர்ந்து காமராஜர், முத்துராமலிங்க தேவர்,  எம்.ஜி.ஆர், முரசொலிமாறன், காந்தி, அம்பேத்கர் உள்ளிட்டோரின் சிலைகளையும் அவர் வணங்கினார். மேலும் அரசியல் ரீதியாக வைகோவுக்கு எதிர்முனையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி, வைகோவை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து வாழ்த்தியதாகவும், ஜனநாயகத்தில் சிஷ்டாச்சார்யார்கள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts