நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் செயல் செல்லாது என இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் செயல் செல்லாது என இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் தூக்கி எறியப்பட்டார். மேலும், நாடாளுமன்றதைக் கலைத்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சேவை நியமித்த அதிபர் சிறிசேனா, தடாலடியாக தேர்தல் தேதியையும் அறிவித்தார்.

அதிபரின் இந்நடவடிக்கையை எதிர்த்து ரணில் ஆதரவு கட்சிகள் உட்பட 13 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அதிபரால் தன்னிச்சையாக நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்றும், 3-ல் 2 பங்கு பெரும்பான்மை எம்.பி-க்களின் ஆதரவு அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக, அதிபர் சிறிசேனா அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டிருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது, இலங்கை அரசியல் அரங்கில் உச்சக்கட்ட பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

 

Related Posts