நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி நிச்சயம் அமையும் : கனிமொழி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கஜா புயல் நிவாரணம் தொடர்பான விவகாரத்தை திமுக எழுப்பும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 7 பேர் விடுதலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது என்றார்.  அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினால்தான் 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்றால் அதற்கு திமுக நிச்சயம் துணை நிற்கும் என்று அவர் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி நிச்சயம் அமையும் என்ற கனிமொழி, அதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கஜா புயல் நிவாரணம் தொடர்பான விவகாரத்தை திமுக எழுப்பும் எனவும். தேவையான தொகை ஒதுக்கப்படவில்லை என்பதை திமுக நிச்சயம் பதிவு செய்யும் எனவும் கனிமொழி கூறினார்

 

Related Posts