நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – தேர்தல் கமிஷனுடன் சட்ட ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, வரும் 16ஆம் தேதி டெல்லியில் சட்ட ஆணையத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.

டெல்லி : மே-10

நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல்களை இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்து சட்ட ஆணையத்துடன் தேர்தல் ஆணையம் வரும் 16ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் உள்ளிட்டோர் இந்த விவாதத்தில் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்தக்குழு ஏற்கனவே அளித்த பரிந்துரையில், முதல் கட்டத் தேர்தலை 2019ம் ஆண்டிலும், இரண்டாம் கட்டத் தேர்தலை 2024ம் ஆண்டும் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

Related Posts