நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 70.90சதவீதம் ஓட்டுப்பதிவு:  சத்யபிரதா சாகு

மக்களவைத் தேர்தலில், இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும்.  புதுச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது  அனைத்து தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.. மீதமுள்ள 37 தொகுதிகளிலும் சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குச் சாவடிகளுக்கு 6மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் , பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, நாடாளுமன்ற தேர்தலில் அதிகபட்சம் நாமக்கல் தொகுதியில் 78 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.5 சதவீதமும் ஓட்டுப்பதிவாகியுள்ளதாகவும் தவிர 18 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 71.62 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளதாக கூறினார்.

Related Posts