நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் 18 வேட்பாளர்களை அறிவித்தது

நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி நேற்று 18 வேட்பாளர்களை அறிவித்தது. அரியானா மாநிலத்துக்கு 6 பேரும், மத்திய பிரதேசத்துக்கு 2 பேரும், உத்தரபிரதேசத்துக்கு 9 பேரும் அறிவிக்கப்பட்டனர். அரியானா மாநிலம் அம்பாலா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜாவும், சிர்சா தொகுதியில் அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வாரும், ரோத்தக் தொகுதியில் தேபேந்தர் ஹூடாவும் போட்டியிடுகிறார்கள்.

 

இதுதவிர உத்தரபிரதேச மாநிலம் கோண்டா தொகுதியில் அப்ணாதளம் கட்சித் தலைவர் கிருஷ்ணா பட்டேலும் போட்டியிடுகிறார். இதுவரை 404 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Related Posts