நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினை அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சமூக சமத்துவப் படை இயக்கத் தலைவர் சிவகாமி, அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன், வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா, கொங்கு நாட்டு மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஈஸ்வரன், பாசத்தைவிட கட்சிதான் முக்கியம் என ஸ்டாலின் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்றார்.

Related Posts