நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்

 

நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி மசூதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும். பக்ரீத் திருநாளின்போது இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் வழியில் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை ‘குர்பானி’ என்ற புனிதப்பலி தந்து சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். வெவ்வேறு நாட்டினர் இந்த பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை வரையில் கொண்டாடுகின்றனர். அதன்படி இந்தியாவில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

Related Posts