நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகள் ஊழியர்கள்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும்  வங்கி அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாதத்தின் நான்காவது சனிக்கிழமை,கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து விடுமுறைகள் வந்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.  இதனைக் கண்டித்து ஒன்பது வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பினர் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வங்கி ஊழியர் சங்கங்கள் நடத்தும் இந்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் வங்கி  ஊரியர்கள்பங்கேற்றுள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக முடங்கிப்போன வங்கிப் பணிகள் இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Related Posts