நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது

நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் நாட்டின் பொருளாதாரம் மோசமான, குழப்பமான நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இதை சீர்செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

பொருளாதார விவகாரத்தில் மத்திய அரசு 10 தோல்விகளை கண்டுள்ளதாக கூறிய அவர்,  ஆட்டோமொபைல் விற்பனையில் ஓராண்டாக 31 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், கார்கள் விற்பனை 23 சதவீதமும், இருசக்கர வாகன விற்பனை 12 சதவீதமும், டிராக்டர் விற்பனை 14 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பங்கு சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், நிதி பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றி தவறான புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டது அம்பலம் ஆகியுள்ளது என்று கூறினார்.

மத்திய அரசு நிதி பற்றாக்குறை 3.46 சதவீதம் என்றும் ஆனால், தணிக்கை குழு மறுமதிப்பீடு செய்து 5.8 சதவீதம் என்று தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், ரியல் எஸ்டேட் துறையில் மந்தநிலை காணப்படுவதால் கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வழங்குவதை குறைத்து விட்டன  என்று அவர் கூறினார்.

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், இந்த மாதத்தில், ஆசிய நாடுகளில் உள்ள நாணயங்களில் ரூபாய்தான் மிக மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அன்னிய நேரடி முதலீடு குறைந்து வருவதாகவும், இந்த மாதத்தில் மட்டும் 9 ஆயிரம் கோடி முதலீட்டை வெளிநாட்டினர் திரும்ப பெற்றுள்ளதாக அபிஷேக் சிங்வி கூறினார்.

Related Posts