நாட்டில் 6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு

நாட்டில் 6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை : மே-05

சென்னை பல்கலைக்கழகத்தின் வைரவிழா மற்றும் 160-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பட்டங்களை வழங்கி பாராட்டினார். விழாவில் பேசிய  குடியரசுத்தலைவர், நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம் என்று கூறியதுடன்,  நாட்டில் 6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு என்று பெருமையுடன் தெரிவித்தார். தமிழ்மொழி மிகத் தொன்மையான மொழி என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், இந்திய பல்கலைக் கழகங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை பல்கலைக்கழகம் விளங்குகிறது என்று கூறினார்.

விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செவ்லவம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts