நாட்டு மக்களைப் பற்றி மோடிக்கு கவலை இல்லை: சரத்குமார்

நாட்டு மக்களைப் பற்றி மோடிக்கு கவலை கிடையாது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளா.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,.  ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை  இன்னும் நேரில் ஆய்வு செய்யவில்லை எனவும், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை,திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை நேரில் சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். பிரதமர் மோடி, தமிழகம் உள்பட உள்நாட்டில் நடக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் போக மாட்டார் எனவும்,. மக்கள் பற்றி அவருக்கு கவலை கிடையாது எனவும் அவர் சாடினார். சபரிமலை  விவகாரத்தில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைகைய சீர்குலைக்க்க் கூடாது எனவும்,. அங்கு நடக்கும் போராட்டத்தை பார்க்கும் போது மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவு இல்லை என தெரிகிறது என்று சரத்குமார் தெரிவித்தார்

Related Posts