நான்கு சட்டமன்ற தேர்தலிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்:   திருநாவுக்கரசர் 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோழமை கட்சியின் தலைவர் நல்லகண்ணு இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றியதை காங்கிரஸ் சார்பில் கண்டிப்பதாகவும் அவர்களுக்கு மாற்று இடத்தை உடனடியாக ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

தேர்தலுக்காக தலைவர்களை விமர்சிப்பது தரம்தாழ்ந்த செயலாக இருக்கும் எனவும் அவர்களின் பெயரை கெடுப்பதற்கு ஒரு மோடி அல்ல கோடி மோடி சேர்ந்தாலும் முடியாது என்று தெரிவித்தார். நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

Related Posts