நாராயணசாமி இரட்டை வேடம் போடுகிறார் : பாஜக மாநிலத் தலைவர் சுவாமிநாதன்

பேனர் தடை விவகாரத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரட்டை வேடம் போடுவதாக புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

காரைக்காலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் பேனர் வைக்க தடை விதித்துள்ள நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் பேனர் வைக்க தடை விதிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளதை  சுட்டிகாட்டிய சுவாமிநாதன்,  கடந்த 2018 ஆம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்று 50 பேனர்கள் வைக்கலாம் என்ற அரசாணையை வைத்துக்கொண்டு நாராயணசாமி  இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டினார்.

இந்த பழைய அறிவிப்பாணையை ரத்து செய்யவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது பொதுநல வழக்கை தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts