நாளை ஏழுமலையான் தரிசனம் ரத்து : தேவஸ்தானம்

திருமலையில் நாளை 5 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வரும்  30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி,  நாளை ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்பட உள்ளதால், காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றவுடன் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

Related Posts