நாளை முதல் கடலுக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்:  சென்னை வானிலை மையம்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்எனவும், . தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மழை பெய்யத் தொட்ங்கும் எனவும் தெரிவித்தார்.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,

கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இலங்கை கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்என அவர் கேட்டுக் கொண்டார். ,  தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 5 சென்டி மீட்டரும், கோவை வால்பாறையில் 4 சென்டி மீட்டரும், தஞ்சை, மதுக்கூர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆகிய இடங்களில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related Posts