நாளை முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

காலாண்டு தேர்வுகள் இன்று நிறைவடைவதையொட்டி, நாளை முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் நீட் பயிற்சி வகுப்புகள் அரசு  மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படுகின்றன. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைவதையொட்டி, நாளை முதல் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 320  ஆசிரியர்களைக் கொண்டு, 413 மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஸ்கரீனிங் தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 28-ந் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் 18 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். காலை 9.30 மணி முதல் 12.40 வரையிலும், பிற்பகல் 1.10 மணி முதல் மாலை 4.20 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

Related Posts