நாளை முதல் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை முதல் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் தொடங்குகிறது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வதற்கான வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் நாளை முதல் தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை பல்வேறு வழிகளில் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்று ஒன்பது ஐந்து பூஜ்ஜியம் 1950 என்ற தொலைப்பேசி எண் மூலமாகவும் வோடர்ஸ் ஹெல்ப் லைன் எனப்படும் மொபைல் ஆப் அல்லது NSVP எனும் தேசிய வாக்காளர் சேவை வலைத்தளம் மூலமாகவும் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டத்திற்காக மாவட்டந்தோறும் அமைக்கப்படும் சிறப்பு மையங்களிலும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts