நிதிநிலை அறிக்கை அச்சிடப்படத் தொடங்குவதைக் குறிக்கும் அல்வா கிண்டும் நிகழ்வு 

 

 

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

 

இந்த பட்ஜெட்டின் நகல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்படும்.  பட்ஜெட்டை அச்சிடும் பணி இன்று தொடங்கியது. இதை குறிக்கும் வகையில், டெல்லியில் நார்த் பிளாக்கில் மத்திய நிதியமைச்சக அலுவலகத்தில் அல்வா கிண்டி, பட்ஜெட் அச்சிடும் பணிக்கு பொறுப்பான அதிகாரிகள், ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்டது

 

அல்வா கிண்டும் சம்பிரதாயம் என்பது நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து,தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான அறையில் பட்ஜெட் அச்சிடும் பணிகள் தொடங்கும். வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றி, அங்கேயே 10 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்து அதிகாரிகள் பணிகளை மேற்கொள்வர்

Related Posts